"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, July 7, 2023

யாழினிது - Reviews



யாழினிது | Yaazhinidhu (Tamil Edition) eBook : Jay, Hema : Amazon.in: Kindle Store

Mr. Muthu Yuraraj - Apr 18, 2023

அருமையான நாவல். நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். தன் தந்தையின் மீது வெறுப்பையே காட்டி வந்த சக்தி படிப்படியாய் அவரை நெருங்கி பாசத்தைப் பொழியும் மகளாய் மாறுவதை இயல்பாய் காட்டியுள்ளீர்கள். நாவலை படித்து முடிக்கும்போது எவர் கண்களும் பனிக்கும். நாவலில் ஆங்காங்கே வரும் மருத்துவ விஷயங்களில் தங்களின் உழைப்பு மிளிர்கிறது. முதல் பரிசு பெற தகுதியான படைப்பு. வாழ்த்துகள்.

Ms. Alamu Palaniappan Apr 13, 2023

" யாழினிது "

ஹேமா ஜெய்
தலைபிற்கான காரணத்தை கதை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து யோசிக்கிறேன். பல அர்த்தங்கள் தருகிறது.
" மனிதம் " பேசும் மற்றுமொரு படைப்பு. துரோகத்தின் வலி தாங்க இயலாதது. அதைத்தாங்கி, உயர்ந்த சக்தியின் வாழ்க்கையில் தந்தை ஆர்கே வரவால் என்ன நடந்தது ? என்பதை மெல்லிய காதல் இழையோட சொல்வியிருக்கிறீர்கள். அத்தனை மனிதர்களின் மனிதமும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
" இறைவா நீஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற"
மேலும் இது போல் பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஹேமா.


Ms. Akhilandabharathy -  Apr 13, 2023

வாசித்து விட்டேன். அருமையான கதை

❤️💕 வாழ்த்துக்கள்

Ms. Srivinu Ganesh - Apr 17, 2023

Hi Hema akka...How are You?
Unga novels lam rombavae different a iruku....Main a ladies oda point of view la ae irukum....Romba nalla irukuthu ka unga novels lam...Yazhinithu yesterday than complete pannaen...Romba nalla irundhadhu...Sakthi Doctor a illa Daughter a nu oru dilema la irundhalum kadaisila Daughter nu prove pannita...Avanga Amma avala avlo nalla valatthirukanga...Awesome Novels ka.....

Reviewed in India 🇮🇳 on 2 July 2023
Verified Purchase
No words to praise the writing skills of Hema Jay.. such a heart touching story and couldn't read it without tears flowing.. Beautiful work by the author.. Well done Hema Jay... I strongly recommend this book.. A must read..
Report
Reviewed in India 🇮🇳 on 25 June 2023
Verified Purchase
வாசித்து முடிக்கையில் மனம் நிறைவாய் உணர்ந்தது. அனைத்து சொந்த பந்தங்களின் பாசமும் நேசமும் உணரும் வகையில் சுவாரஸ்யமாக கட்டமைக்கப்பட்ட கதையின் போக்கில் அமைந்த அருமையான குடும்ப கதை. சுருங்கச்சொல்வது உங்களுக்கு வெகு அழகாக கை வந்திருக்கிறது. வாசிக்க இனிமையான இருந்தது தங்களின் எழுத்து நடை. மிகவும் விரும்பி வாசித்தேன். வாழ்த்துகள் 🎉🎊💐

No comments: