"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Thursday, April 13, 2017

விழிகள் தீட்டும் வானவில்

ஹலோ மக்களே,

எல்லாரும் எப்படி இருக்கீங்க?  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள்!

எல்லோரும் பிறந்திருக்கும் புதிய வருஷத்தின் இனிமையை குடும்பத்துடன் கொண்டாடிட்டு இருப்பீங்க.. இந்த இனிய தருணத்தில் நானும் புதிய கதை  ஒன்றை தொடங்கலாம்ங்கிற எண்ணத்தில் வந்திருக்கேன்.  ‘விழிகள் தீட்டும் வானவில்’ – நாவலின் தலைப்பு நல்லா இருக்கா?


கதைகள் வழியாக பேசி ரொம்ப நாளான மாதிரி ஒரு பீல். இந்த வேகத்துல போனா, வருஷம் இரண்டு ஆனாலும் ஒண்ணுமே பண்ண மாட்டேன்னு நல்லா புரிஞ்சு போச்சு.. அது தான் உங்களை எல்லாம் நம்பி களத்துல இறங்கிட்டேன் : )

‘விழிகள் தீட்டும் வானவில்’ – துடிப்பும் துள்ளலும் கொண்ட சாதாரண இளைஞன்; அவன் சந்திக்கும் அசாதாரண சந்தர்ப்பங்கள் என சுழலும் இக்கதையின் உயிரிழை காதல், லவ், ப்ரேமம், ப்ரீதி & ப்யார் மட்டுமே. இந்த கதையும் இதில் வரும் மனிதர்களும் உங்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.

வரும் திங்கள் முதல் வாரம் இரண்டு, முடிந்தால் மூன்று பதிவுகள் போடலாம் என்று ஒரு எண்ணம். வாசிக்கும் அன்புக்குரியவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான். படித்து விட்டு அப்படியே சென்று விடாமல் உங்கள் எண்ணங்களை சொல்லி செல்லுங்கள்.

ஆன்லைனில் கதைகள் பதிவிடுவதால் நிகழும் சிக்கல்கள் குறித்து அனைவரும் அறிந்ததே. நான் புதுசா சொல்ல ஒண்ணுமே இல்ல. அதையெல்லாம் மீறி நாங்கள் இங்கு கதை போடுவது உங்களுடைய கமெண்ட்ஸ்-க்காக மட்டும் தான். அது தவிர வேறு எந்த சந்தோசமும், உத்வேகம் கொடுக்கும் காரணியோ இருக்க முடியாது என்று உங்களுக்கே நன்றாக தெரியும். அதனால், குறை நிறைகளை சுட்டிக் காட்ட தயங்காதீர்கள்.  

ஓகே.. பேக் டூ தி பாயின்ட்...  வரும் திங்கள் முதல் ‘விழிகள் தீட்டும் வானவில்‘ உடன் சந்திப்போம். அதுவரை புத்தாண்டு தின சந்தோசங்களை மெல்ல மெல்ல ருசித்து விழுங்குவோம்.

அன்புடன்,
ஹேமா

2 comments:

arunavijayan said...

All the best for your new story

HemaJay said...

Many Thanks Aruna!