Hema Jay யின் "ஙஞணநமன மெல்லினமாம்" அருமையா இருந்தது ஹேமா....என் தூக்கத்தை ஸ்வாஹா செய்த கதைகளில் இன்னுமொன்று....
சில கதைகளை எடுக்கவே பயப்படும் காரணம் இது தான்.... சோறு முக்கியம்னு நீங்க கதையில் சொன்னாலும் எனக்கெல்லாம் தூக்கமும் முக்கியம் பா....என்ன செய்வது தெரிந்தே செய்யும் என் போன்றவர்களை....
தலைப்பு ரைமிங்காக வைத்திருப்பார்களாயிருக்கும் போல என்று ஆரம்பித்த போது இருநத நினைப்பு வாசித்து முடித்தவுடன்அழகான பொருளைத்தந்தது.
யார் மெல்லினம்? ....கதையில் தெரிந்துகெள்ளளலாம்...எல்லார் வீட்டிலும் நடக்கும் நிகழ்வுகளே களம்....வேலைக்குப்போகும் கணவனும் மனைவியும், அதுவும் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு கூடுதலாக வீட்டுச்சுமைகளும் சேருவது - மாமனார் மாமியார் பொறுப்பு... , புதுமணத்தம்பதிகளிடையே எனும் போது என்ன ஆகும் ...? அவ்வளவுதாங்க... நாம் எல்லோரும் கயிற்றின் மேல் நடந்து சமாளிக்கிறோமே....அதே தான்.....ஆனால் அது சாதாரணமானதா? நாயகன் நாயகி வாழ்க்கையில் நடந்தது என்ன? அவங்க பேர் சொல்ல வேண்டாம்னு நினைத்தேன் ... ஏன்னென்றால் ஹேமா ஆறு அத்தியாயம் வரை யார் நாயகன்னு சஸ்பென்சா கொடுத்த விதம் அழகு...அதை நான் இங்க சொல்லல...
ஹேமா
1. அடிக்கடி கதை கொடுங்க பா...
2. இதில் வித்தியாசமா ரயில் பயணத்தில் தொடங்கும் கதை, இடையிடையே....யார் யார் னு அறிமுகமாகி.....அவர்கள் வாழ்க்கையைச்சொல்லி சுற்றுலாவில் நமக்கும் சிக்கிம்மை சுற்றிக்காட்டி சுற்றலா முடியும் போது என்ன மாற்றம் ஏற்பட்டதுனு கொண்டு போனது என்னைக்கவர்ந்தது.
3.உங்க கதாநாயகிகள் எப்பவும் ரெம்ப ஸாப்ட் தான்....அதிலும் இதில் ரெம்பவே... அவ்வளவு துடிப்பான பெண்ணிற்கு இப்படி ஆகிவிட்டதே... என்று என் கண்ணில் நீர் வர வைத்தது அந்த மருத்துவமனை காட்சிகள். நல்ல வேளை "லுாசா நீ " மற்றும் " அம்மா அழறா ப்பா ... ஹா ஹா ஹா " போன்ற கேள்விகளிலிருந்து தப்பித்தேன்....பிசாசு போல் அர்த்த ராத்திரியில் வாசித்ததால்.
4.ஆண்கள் ஆரம்பத்தில், நாம் சொல்லும் சில சௌகரியக்குறைச்சல்களை, சிரமங்களை காது கொடுத்துக்கேட்காமல் பட்டுத்தான் தெளிகிறார்கள் உங்கள் ( எங்கள் )நாயகனைப்போல.....ஆனால் அவனின் மாற்றம் நிறைவு.... அவன் காய் வெட்டித்தரும் அழகே அழகு.....
5. "அப்பா " இந்தக்கதையிலும் அந்த அப்பா அவ்வளவு பிடித்தது எனக்கு... சொல்கிறாரே , ஏற்றத்தாழ்கள் மட்டுமல்லாமல் பழக்க வழக்கங்களே மாறும் குடும்பத்தில் நீ போகும் போது அதற்கான சிரமங்கள் இருக்கும் என்று... இதெல்லாம ஒரு விஷயமா என்று நினைப்பவை பின்னர் பூதாகரமா மாறும் போது...? விளைவு?
6. கவியைப் போல் ஒரு அக்கா இருந்தால் போதும் .. எதையும் எதிர்கொள்ளலாம்.... என் தங்கையிடம் கேட்கவேண்டும் நான் அப்படிப்பட்ட க்கா தானே என்று?
7. ஆர்த்தியைப்போன்ற தோழிகள் இல்லாதவர்களே இருக்கமாட்டோம்... அனைத்தையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நட்பு.... அதனால் தான் ஓடும் ஓட்டத்தில் இளைப்பாற முடிகிறது.....
8. மாமா , மாமி, கவி, பாலா..... இந்த தம்பதியர்களின் இடையிலான புரிதல்கள்.... எல்லாமே ரெம்ப நல்லா சொல்லியிருந்தீங்க...
9. Also with a bonus of very sweet romance which made me smile ..... i assure all will accept me in this once they finish reading
இன்னும் நிறைய நினைத்தேன் வாசிக்கும் போது உங்களிடம் சொல்ல .... ஆனா இது அப்புறம் கதை போல ..... போய், இவங்க (நான் தான் )எழுதி யார் வாசிப்பது ன போயிடாம.... டாட்
வாழ்த்துகள் ஹேமா.....அதுமட்டுமல்லாமல் கோரிக்கையுடன், நிறைய இடைவெளி இல்லாமல் கதை தாங்க ...என்பதோடு பை பை....
_____________________________________________
NgaNjaNaNaMaNa Mellinamam! (Tamil Edition)" by Hema Jay. Hema Jay
Start reading it for free: https://amzn.in/hImjRmw
அருமையான படைப்பு ஹேமா
வழக்கம் போல் எடுத்துக் கொண்ட டாபிக்கை துளியளவும் ட்ராக் மாற்றாமல் கொண்டு போய் பிரச்சனையையும் , அதற்கான தீர்வையும் காண்பித்தது கவர்ந்தது.
இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான உறவு....
Spoiler Alert ( ss kum sertu)
இரண்டு வெவ்வேறு குடும்பச் சூழலில் வளர்ந்தவர்கள் திருமணத்தில் இணையும் போது , சில குட்டி குட்டி எதிர்பார்ப்புகளும் கூட நிறைவேறாத நிலை வரும் போது...என்னவாகும்?...
எனக்கு தெரிந்ததெல்லாம் நேர்மை....மை ...மை இதுதான் நம்ம சரயூ
( ஆர்த்தி தான் ரீடர்ஸோட மைண்ட் வாய்ஸ்...இன்னும் திட்டு அவளைனு தோணுச்சு )
என் வேலை எனக்கு முக்கியம்பா...காதலிச்சேன்...கல்யாநம் செய்துக் கொண்டேன்....மீதிப் பொறுப்பு குடும்பத்தலைவி கிட்ட ...அப்புறம் நான் என் வேலையில் எப்படி கவனம் செலுத்த முடியும்? ..இது நம்ம மித்ரன்...
பார்த்தால் பெரிய விஷயமான்னு தோணும்...ஆனால், கதையில் நிகழ்வன எல்லாம் பெரிய விஷயங்கள் தான்.
இது போல பெண்கள் இருக்கிறாங்க...நிஜம் தான்.
கதைச் சொன்ன விதம் மிக அழகு
குவாரண்டைன்ல ட்ரெயின் ஜர்னி...பொற்கோவில், அசாம்....நல்லா சுத்தினோம் நன்றிகள்.
நிறைவான முடிவு
வாழ்த்துகள் 🎊 ஹேமா
-------------------------------------------------
Gentle and lovely romance. Train journey n the trip, vikki, Bala Galattas enjoyable. Kavi n Sarayu bonding n love was touching. Best wishes to you! Thank you dear!
No comments:
Post a Comment