"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, September 18, 2020

ஆனந்தி - கிண்டிலில்

வணக்கம், 

’ஆனந்தி’ நாவலை தற்போது கிண்டிலில் பதிவேற்றியுள்ளேன். இயல்பான மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் இந்நாவல் எங்கள் ஊர் மக்களைப் பற்றியது. அதனால் என் மனதிற்கு நெருக்கமானதும் கூட. 

எந்த ஊராக இருந்தாலும் அங்கு பெரும்பான்மையாக நடைபெறுகிற தொழிலைப் பொறுத்தே அங்குள்ள வாழ்க்கை இயல்புகளும், சூழல்களும் இருக்கும். இங்கும் அப்படித்தான். என் மண்ணைப் பற்றி எனக்குத் தெரிந்த விதத்தில் பதிவு செய்ய இயன்றதில் என்னளவில் சிறு மகிழ்ச்சி எனினும் வாசகர்கள் வாசித்துச் சொல்லும்போது தான் எந்த முயற்சியும் முழுமை பெறும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. இயன்றவர்கள் இந்நாவலை வாசித்துப் பாருங்கள். வாசித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் மிக்க மகிழ்வடைவேன்.

https://www.amazon.in/dp/B08J87RQDP

 

https://www.amazon.com/dp/B08J87RQDP

 

நன்றி!

 

அன்புடன்,

ஹேமா ஜெய்

No comments: