Ms. Anu - July 3, 2020
Hi Hema ma'am,
Hope you are doing great.. this is ----.. do you remember me maam? I have once written for ஆயிரம் ஜன்னல் மனசு ..
i have just read your nganjananamana mellinimam in kindle.. the plot was really fantastic, no words to explain how i felt.. i have read few parts again and again, sometimes i totally forgot that i am reading a story and got nostalgic feeling almost everywhere..
Love the way you narrate your stories from beginning, introducing each characters with mild suspense and twists. வாழை பழத்தை உரித்து கையில் தராமல், இது என்னவாக இருக்கும்னு you make us to keep on guessing.. இப்படி தான் இருக்கும் என்று அறிவிற்கு 100% தெரிந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் இடத்தில் எல்லாம் confuse ஆகி பின் தெளிய வைக்கும் எழுத்து திறமை amazing..
இங்கு கூட மாமிக்கு doubt clear ஆகும் இடத்தில் நான் கூட clear ஆனேன் 😊😊.. loved sarayu's character very much..
flash back இல் என்ன பூதம் வர போகிறதோ என்று உண்மையிலே டென்ஷன், நல்லா
தானே போய்ட்டு இருக்குன்னு நினைக்கும் போதே ஏழரையை aeroplane வச்சி
கூட்டிட்டு varalenu இன்னும் டென்ஷன்..
பிரச்சனை என்று வந்தால் most
of the husbands இயல்பாகவே எப்படி behave பண்ணுவாங்களோ அதை அப்படியே
குடுத்திருக்கீங்க.. அந்த train கூடவே நாமும் travel பண்ணி வித விதமாக
சாப்பிட்ட feeling படிப்பவர்களுக்கு இப்படி கூட உணர வைக்க முடியுமா,
wonderful feeling maam..
"காதலெல்லாம் கழுத்தில் தாலிகட்டுவதோடு காலாவதி ஆகி விடும் சங்கதி போல", "மனசு வேறு உடம்பு வேறா" போன்ற lines எல்லாம் படிக்கும் போது கண்களில் குளம் கட்டி விட்டது, நான் அவ்வப்போது நினைக்கும் கிட்டத்தட்ட அதே வார்த்தைகள்..
Ending மிக அருமை.. இவ்வளவு practical and realistic ஆக கூட எழுத முடியுமா i was really wondering.. such an amazing work.. hats off and keep rocking.. all the best maam..
love and regards,
Anu
---------------------------------------------------------------
Ms. Sivaranjani - July 2, 2020
ஙஞணநமன மெல்லினமாம்
ஹேமா ஜெய்
ரயில் பயணங்களில் முகம் தெரியாத நட்புகள் அறிமுகமாகி பின் இறங்கும் போது மனம் வராமல் பிரிவதுண்டு.
இங்கு தன் சுற்றத்தோடு செல்லும் சரயு, பிரிவில் இருந்து ஆரம்பித்து திரும்பி வருகையில் இணைந்து வருகிறாள்.
ரயில் பயணம் தான் மொத்த கதையையும் சொல்லி செல்கிறது, ஆனால் எங்குமே ஒரு சலிப்புத் தட்டாமல், அத்தனை தகவல்களை சொல்லி, முன்பின் என்று நினைவுகளையும், நிகழ்வுகளையும் கொண்டு சென்றது நன்றாக இருந்தது.
காதல் கதை போல ஆரம்பித்து, தம்பதிகளுக்குள் சண்டை என வந்து, பின் முழுமையான ஒரு குடும்ப கதையை சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு பெண்ணும் இதில் வரும் காட்சிகளை தங்கள் வீட்டின் நிகழ்வுகளோடு பொருத்திக் கொள்ள முடியும்.
சரயுக்காக அவளே தனக்கு யாருமில்லை என்று சொல்லும் போது வாசகர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல தோன்றும் படியான காட்சியமைப்புகள்.
மித்ரன் எல்லா குடும்ப ஆண்களின் பிம்பம்.
பாலா, கவியுமே சராசரி குடும்ப பிரதிநிதிகள். ஆனால் பாசமான அக்கா, மாமா.
குடும்ப உறவுகளில் யாரையும் தப்பு சொல்ல முடியாது, அவர்களின் சுபாவங்களே மற்றொருவருக்கு எதிரியாக்கும் என்பதை சொல்வது போல் இருக்கும் மாமனார், மாமியார்.
சரயுவின் அப்பா சொல்வது கடைசியில் சரியாகிப் போகிறது. ஆணின் பெற்றோருக்கு மருமகள் எல்லா கடமையையும் செய்யும் போது தன் பெற்றோருக்கு அவள் சுதந்திரமாக எதுவும் செய்து விட முடியாது நிலை இன்றும் நம் கண்முன் காணக் கூடியது தான். அதையும் நாம் அருகில் இருந்து பார்ப்பது போல் வடிவமைத்திருக்கும் காட்சிகள் நன்றாக இருந்தது.
பயணத்தில் வரும் மாமா, மாமியின் புதிய வானம் புதிய பூமி காதலை ரசித்தேன். அதே போல் விக்கி பேசும் ரகளை வசனங்கள், மித்ரனின் காதல் வசனங்கள், சுட்டிகளின் கேள்விகள், ஒவ்வொரு இடத்தில் ரயில் நிற்கையில் அந்த இடத்தை பற்றியும், அந்த உணவுகளை பற்றியும் கதை நெடுக கொடுத்து வந்த குறிப்புகள், அதெல்லாம் மீறி சிக்கிமின் மக்கள் வாழ்க்கை முறை, யதார்த்த நிலையை சொல்லும் போதும், பெண்கள் மாதவிடாயின் போது பயனபடுத்தும் முறையை சொல்லும் போது சரயு போலவே நானும் அதிர்ந்தேன்.
அழகான முடிவுடன் சரயு தன் வாழ்க்கையை தொடங்குவது இறுதியில் நிறைவாக இருந்தது.
நேஹாவின் கதைக்கு பின்னர் படிக்கும் கதை,இரண்டுக்கும் எத்தனை வித்தியாசம்.ஆனால் இதில் வந்த மருத்துவ தகவல்கள் கூட அருமை.
வாழ்த்துகள் ஹேமா 💝💝💝💝.
___________________________________________
ஙஞணநமன மெல்லினமாம் - ஹேமா சூப்பர் எப்படி என்று எழுத என்னிடம் வார்த்தைகள் இல்லை ஹேமாவுக்குள்ளிருக்கும் வல்லினம் (வல்லமை ) மிரள வைக்கிறது
No comments:
Post a Comment