"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Friday, July 28, 2023

‘நீ நான் நாம் வாழவே’ - முழு ஆடியோ நாவலாக

ஹாய் டியர்ஸ் 💕

‘நீ நான் நாம் வாழவே’ முழு நாவலாக சேனலில் அப்லாட் செய்திருக்கிறோம்,  

https://youtu.be/49TdYD41MS0

https://youtu.be/F4_OLYh8VYg

கேட்டு மகிழுங்கள். 💕 தொடர்ந்து கதைகளைக் கேட்க சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள். 💕 Thanks everyone for your love & support! 

https://www.youtube.com/@hemajaynovels

#tamilaudionovels

#hemajaynovels

#nee_naan_naam_vaazhave

#நீ_நான்_நாம்_வாழவே


Tuesday, July 18, 2023

‘துளிர்த்தெழும் தளிர்கள்’ எனும் புதிய புத்தகம்

 ஹாய் டியர்ஸ்,

ஒரு மகிழ்வான செய்தி! ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ எனும் புதிய புத்தகம் இப்போது வெளியாகி உள்ளது. ‘துளிர்த்தெழும் தளிர்கள்’ மற்றும் ‘அத்தியாயம் இரண்டு’ ஆகிய இரு நாவல்களின் தொகுப்பு இது. எழுதும்போதே மனதுக்கு மிகவும் திருப்தியைத் தந்த இவ்விரு கதைகளும் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. வாய்ப்புள்ளவர்கள் அவசியம் படித்துப் பாருங்கள். எனது புத்தகங்களைத் தொடர்ந்து பதிப்பித்து உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பிரியா நிலையத்தினருக்கு நன்றி! என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் ஊக்கப்படுத்தி, கருத்துகள் நல்கி, உற்றத் துணையாக உள்ள வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


 

புத்தகத்தின் முன்னுரையில் இருந்து -

“பெண்ணின் நிஜமான மகிழ்ச்சி எதில் உள்ளது, மில்லியன் டாலர் கேள்வி அல்லவா இது? படிப்பு, பொருளீட்டல், பதவிகள், அன்பான குடும்பம், அக்குடும்பத்தின் வெற்றிகள் என எல்லா திருப்தி தரும் அம்சங்களையும் தாண்டி ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் நிறைவுறுவது தன்னைத் தானே கண்டடையும் தருணத்தில் தான் என்று எனக்குத் தோன்றும். உண்மையிலேயே தனக்கு என்ன தேவை, எது தன் மனதை அமைதிபடுத்துகிறது என ஒரு பெண் தனக்குள்ளேயே மீள் கண்டுபிடிப்பு செய்து கொள்ளும்போது அவள் வாழ்க்கை இன்னும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாறுகிறது. அப்படி ‘Rediscovering herself’ ஆகத் தனக்கான ஆசுவாச வெளியைத் தேடி அடைய விரும்பும் இரு பெண்களின் வாழ்க்கை தான் “துளிர்த்தெழும் தளிர்கள்” தொகுப்பாக உங்கள் முன்பு. வாழ்வின் பெரும் நாட்களை அடுத்தவரின் இசைக்கோர்ப்பிற்கேற்ப ஆடி சலித்த ‘துளிர்த்தெழும் தளிர்’களின் நாயகி நந்தினி, “Duty Conscious” ஆகத் தனது எல்லா பொறுப்புகளையும் சரி வர நிறைவேற்றியும் நாளின் இறுதியில் ஏதோ ஒரு வித போதாமையை உணரும் ‘அத்தியாயம் இரண்டு’வின் நாயகி நிலா – இவர்கள் இருவரின் ஆற்றாமையும், தேடலும், கண்டடைதலும் வாசிக்கும் உங்களுக்கும் நிறைவளிக்கும் அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்.”

புத்தகங்கள் கிடைக்குமிடம் - பிரியா நிலையம், சென்னை (No.51, Gowdia Mutt Road, Royapettah - 600014. Phone: 94444 62284) மற்றும் அனைத்து ஆன்லைன் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும். 

அன்புடன்,

ஹேமா ஜெய்


Friday, July 7, 2023

யாழினிது - Reviews



யாழினிது | Yaazhinidhu (Tamil Edition) eBook : Jay, Hema : Amazon.in: Kindle Store

Mr. Muthu Yuraraj - Apr 18, 2023

அருமையான நாவல். நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள். தன் தந்தையின் மீது வெறுப்பையே காட்டி வந்த சக்தி படிப்படியாய் அவரை நெருங்கி பாசத்தைப் பொழியும் மகளாய் மாறுவதை இயல்பாய் காட்டியுள்ளீர்கள். நாவலை படித்து முடிக்கும்போது எவர் கண்களும் பனிக்கும். நாவலில் ஆங்காங்கே வரும் மருத்துவ விஷயங்களில் தங்களின் உழைப்பு மிளிர்கிறது. முதல் பரிசு பெற தகுதியான படைப்பு. வாழ்த்துகள்.

Ms. Alamu Palaniappan Apr 13, 2023

" யாழினிது "

ஹேமா ஜெய்
தலைபிற்கான காரணத்தை கதை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து யோசிக்கிறேன். பல அர்த்தங்கள் தருகிறது.
" மனிதம் " பேசும் மற்றுமொரு படைப்பு. துரோகத்தின் வலி தாங்க இயலாதது. அதைத்தாங்கி, உயர்ந்த சக்தியின் வாழ்க்கையில் தந்தை ஆர்கே வரவால் என்ன நடந்தது ? என்பதை மெல்லிய காதல் இழையோட சொல்வியிருக்கிறீர்கள். அத்தனை மனிதர்களின் மனிதமும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.
" இறைவா நீஆணையிடு, தாயே எந்தன் மகளாய் மாற"
மேலும் இது போல் பல பரிசுகள் பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஹேமா.

Tuesday, June 20, 2023

மலரவிழ் - reviews


Ms. Vatsala - Mar 31 2023

ஹலோ ஹேமா,
இன்று மலரவிழ படித்தேன். வழக்கம்போல் உங்களின் எழுத்து மனதை கவர்ந்தது….விவாகரத்து செய்த இருவேறு கதாபாத்திரங்கள்…சாரா..என்னசொல்ல..இயற்கையை நேசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்..
அரவிந்தனின் பெயர்காரணம் சொல்லி அவன் தந்தை புலம்பும் இடம்…classic..excellent..நாபா எழுதிய குறிஞ்சிமலரின் அந்த பாத்திரபடைப்பு உங்களின் கை வண்ணத்தில் 60 ஆண்டுகள் கழித்து படிக்கும்போது…it took me to my teenage world.  
வாழ்த்துக்கள் ஹேமா.
அன்புடன் 
வத்ஸலா

Ms. Alamu palaniappan - Mar 22 2023

கதைகளில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று கதைகளில் வாழ்வியலைப் பதிவு செய்வது ... இந்தக் கதையும் அவ்வகையே. உங்கள் நாயகனான அரவிந்தன் எப்போதும் போல் மனம் கவர்ந்தான். வாழ்த்துகள் ஹேமா

Ms. Nisha D - Apr 7 2023
Recently I have read Malaravizh novel of yours.That was such a pleasant ending. One of my sister's name is Poorani. That too inspired by Na.Pa's Kurinji Malar. What an extraordinary characterisation of Poorani and Aravindhan in that book. I am really happy that you write about how ppl should be and highlighting their positives. I was recently very fed up by some most unpleasant things some writers had written in their book. This book gave me some good feel now. Thanks to you. Keep up the good work. Wishing you for your future endeavors. Keep writing 😊.
All reactio
Ms. Geetha Ravichandran - Apr 17 2023
இப்போ தான் மலரவிழ் படிச்சு முடிச்சேன். என்ன மாதிரியான ஒரு கதை..... இந்த சமுதாயத்தில் நிறைய ஜேனும் அரவிந்த் ம் இருக்காங்க... எவ்ளோ பேர் அந்த டாக்ஸிக் ல இருந்து வெளியே வராங்கன்னு பார்த்தா, 1% தான் இருப்பாங்க.... இனிமேலாவது இதுல விழிப்புணர்வு வரணும்... காதல் ங்கறது ரெஸ்பெக்ட்.... சத்யமான வார்த்தை....
வாழ்த்துக்கள் ஹேமா..... இந்த மாதிரி யான சமுதாய கதைகள் நீங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Saturday, June 3, 2023

முழு நாவல்கள் ஆடியோ வடிவில்

 #hemajaynovels

என் கதைகளை இனி ஆடியோ வடிவிலும் கேட்கலாம். ❤️‍

Hema Jay Audio Novels - YouTube

கீழ்கண்ட மூன்று நாவல்கள் முழு நாவல்களாக பதிவேற்றப்பட்டு உள்ளன. 

மலரினும் மெல்லிய -  https://youtu.be/tH3se6I9L4I

இதழ்வரி கவிதை - https://youtu.be/sbk0zn2c02A

ஆயிரம் ஜன்னல் மனசு - https://youtu.be/YGTs6XVPk3k


நீ நான் நாம் வாழவே - series -ஆ வருகிறது. https://www.youtube.com/playlist?list=PL_85oj5cmzZroyJ6BHAENd4u0cQK3_bBX


சிறுகதைகளை ஒவ்வொன்றாக பதிவிட்டு வருகிறோம் - 

https://www.youtube.com/playlist?list=PL_85oj5cmzZqylxZ3JtrlS8Yk2BV3n2OB


கேளுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். சேனலை மறக்காமல் subscribe செய்து கொள்ளுங்கள். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி! ❤️‍


Friday, April 21, 2023

ஆயிரம் ஜன்னல் மனசு இப்போது ஆடியோ வடிவில்.

#ஆயிரம்_ஜன்னல்_மனசு இப்போது ஆடியோ வடிவில்.

https://youtu.be/YGTs6XVPk3k


கேட்டு மகிழுங்கள். Like, Comments & Share மூலம் உங்க கருத்துகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க. சேனலையும் மறக்காமல் Subscribe செய்து கொள்ளுங்க. 

Thanks everyone for your support!

Channel link -

https://www.youtube.com/@hemajaynovels


#முழு_நாவல் 

#tamilaudionovels

Thursday, April 13, 2023

யாழினிது - கண்மணி

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

இந்த வார கண்மணியில் (19-4-2023)-ல் ஆதித்தனார் நினைவு நாவல் பரிசு போட்டியில் பரிசு பெற்ற 'யாழினிது' வெளியாகியுள்ளது. மிக மிக மகிழ்ச்சியான தருணம்🙂🙂



Tuesday, April 4, 2023

மலரவிழ் - உங்களுடன் சில வார்த்தைகள்

ஹாய்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமா?

ஒவ்வொரு கதை எழுதியபின்பும் அது பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக, மிளிர் மற்றும் மனங்கொத்திப் பறவை எழுதியபோது. அக்கதைகளை எழுதத் தூண்டிய அனுபவங்களைப் பகிர வேண்டும் என்று தோன்றும். பிறகு வாசிப்பவர்களின் எண்ணங்களுக்கு ஊடாக நுழைய வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவது. ஆனால், மலரவிழ் குறித்து ஒரு சில வார்த்தைகளாவது உங்களுடன் பகிர வேண்டும் என்ற உள் மன அழுத்தம் தொடர்ந்து கொண்டே உள்ளது. 

நிறைய நேரங்களில் எழுத்து ஒரு வடிகால். சில கதைக்கருக்களை எழுதும்போது அது படிப்பினையாகவும் அமையும். ‘ஙஞணநமன மெல்லினமாம்!’ எழுதியபின் ஒரு தெரபிக்கு சென்று வந்தது போல உணர்ந்தேன். சில நபர்களிடம் பிரதி அன்பை எதிர்பார்ப்பது நேர விரயம் என்பது அதன்பிறகே என் மனதிலும் அழுத்தமாகப் பதிந்தது. Let go செய்வதை அலுப்புடன் செய்யாமல் புன்னகையுடன் செய்யக் கற்றதும் அப்போது தான். இப்படிச் சில கதைகள் vent என்றால், சில கதாபாத்திரங்கள் நம் மனதுக்குள் புகுந்து வேறெதிலும் நாட்டமில்லாமல் செய்து விடுவார்கள், மலரவிழின் ஜேன், அரவிந்தனைப் போல.

எழுதி மாதங்கள் கடந்தும் இவர்களின் தாக்கம் இன்னும் என் மனதிலிருந்து அகலவில்லை. கதைகளில் தீர்வு கொண்டு வந்து விடலாம். நிஜத்தில்…?? என்ற கேள்வி குடைந்து கொண்டே உள்ளது. இந்தக் கதையும், மனிதர்களும், நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனை என்றாலும் அரவிந்தனின் சாயல் கொண்ட இளைஞனை நான் அறிவேன். திருமண நேரத்தில் அவன் எவ்வளவு துறுதுறுப்பாகத் தங்கள் கனவில்லம் சமைத்தான் என்றும், பிறகு பேசாமடந்தையாக மாறி விட்டதையும் பார்த்திருக்கிறேன். சொல்லம்புகள் வாங்கிக் கொண்டே புன்னகையுடன் வளைய வரும் ஒரு ஜேனை அரவிந்தனை விட அதிக நெருக்கத்தில் தெரியும். நம் வீடுகளுக்குள் நடக்கும் இத்தகைய குடும்ப வன்முறைகளைப் பற்றி இன்னும் பல நூறு கதைகள் எழுதலாம். அத்தனை நுண் குத்தல்கள் நடக்கிறது உறவுகளுக்குள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அதில் சிக்கும் குழந்தைகளே. எத்தனை வளர்ந்தாலும்,  வாழ்வில் எவ்வளவு தூரம் சென்றாலும் ஆதியில் ஏற்பட்ட மன பயமும், அழுத்தமும் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவிதத்தில் அர்வியின் நிலையிலிருக்கும் ஆண்/பெண்கள் கூட வயதின் அனுகூலத்திலும், இப்போதுள்ள சமூக மாற்றத்திலும் எப்படியோ வெளி வந்து விட முடிகிறது. இன்னொரு நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. அஃப்கோர்ஸ் அவர்களின் அத்தனை வலிகளையும் கடந்து தான். ஆனால் ஜேன்கள்? அது அவர்கள் வாழ்க்கை, அவர்களின் முடிவு என்று சாரா போல கையறு நிலையில் நின்று யோசிக்க முயன்றாலும் ஜேன் தொடர்ந்து என் தூக்கங்களைப் பறித்துக் கொண்டே உள்ளார். (இப்போதும் ஒரு vent போலவே இவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் :) குறைந்தபட்சம் வேறு வேலைகளில் மனம் திருப்பலாம் என்று தான் யூ-ட்யூப் சேனல் பற்றி யோசித்ததே. அதுவரை சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ சிஞ்சித்தும் இல்லை. என் அன்புக்குரிய ஜேனுக்கே அதற்கான நன்றிகள் அனைத்தும் 😊 ) 

கணவன் மனைவிக்கு இடையே மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமாகச் சில உறவுகளிலும் நட்புகளிலும் கூட நச்சு முகங்கள் உண்டு. இதற்காக நிறைய வாசித்தேன். பல குடும்ப நீதிமன்ற வழக்குகளைப் பற்றி அறிய முடிந்தது. எழுதுவதற்காக நிகழும் கற்றல் பெறுமதி மட்டுமல்ல. அது தெளிவையும், ஒருவித empowerment-ஐயும் கூடத் தருகிறது. ஏற்கனவே இனங்கண்டிருந்தாலும் போகட்டும் என்று நினைத்திருந்த சில டாக்சிக் நபர்களை இப்போது இன்னும் நுணுக்கத்துடன் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் எழுத்து அருமையான learning process. நாவலை முடித்தபிறகும் நீண்ட நெடிய மாதங்கள் எடிட்டிங்கில் சென்றது. மதிப்புக்குரிய ஆளுமைகள் சிலர் வாசித்து அவர்களின் கருத்துக்களை அறிந்தபின் கடைசி நிமிடத்தில் பதிப்புக்கு அனுப்பினேன். 🏃🏃🏃

Say STRICT NO to toxic relationships & zero tolerance for toxicity என்பதே இக்கதையின் ஊடாகச் சொல்ல விரும்பியது. அது சரியாக சென்று சேர்ந்துள்ளதை உங்கள் மறுமொழி வாயிலாக அறியும்போது நிறைவாக உள்ளது. இறைவனுக்கு அடுத்து இப்பயணத்தில் என் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கு என் நன்றிகள் 🙏! புத்தகமாக வந்தவுடன் இளம்தோழி ஒருவர் அனுப்பிய கடிதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி!









மலரவிழ் குறித்த அவருடைய பார்வையும், புரிதலும் நிறைவளித்தது என்றால் அவருடைய தோழி எழுதிய ஆங்கில வரிகளின் ஆழமான அர்த்தம் மனதை நெகிழ செய்தது. எழுதுவதின் பயன் இது போன்ற பகிர்தல்கள் இன்றி வேறொன்றுமில்லை. அன்பும் நன்றியும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் தோழி! இதுவரை வாசித்த உங்கள் அனைவருக்கும் என் அன்பு! கதைகளின் வழியாக ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து தொடர்ந்து பயணிப்போம் 😊

Wednesday, March 22, 2023

'மலரவிழ்' நாவல் - கிண்டிலில்

டியர் மக்களே,

'மலரவிழ்' நாவல் இப்போது கிண்டிலில்.
Enjoy reading!🙂 Do share a word if you like the heart of the story.💕
புத்தகத்தின் முன்னுரையில் இருந்து -
ஒவ்வொரு மலருக்கும் மலரும் தருணம் என்று ஒன்று உண்டு தானே. சில கதிரவனின் முகம் காட்டலில். சில பளபளவென்று பொழுது புலர்ந்து வரும்போது. சில மாலையின் சுகந்தமான காற்றில். சில நிலவின் தண்மையான பொழிதலில். இவற்றுக்கு விதிவிலக்காக மொட்டவிழும் தருணம் வாய்த்தும் சில மலர்கள் மூடியே கிடப்பதும் உண்டு. அது அவற்றின் குற்றமல்ல. அக செழிப்பையும் தாண்டி சூழலும், புற காரணிகளும் தானே ஒவ்வொரு மலரின் மலர்வையும் தீர்மானிக்கின்றன. அப்படிக் கூம்பி கிடக்கும் சில மலர்களின் விழிப்பையும், இதழ்விரிப்பையும் சொல்லும் கதை தான் “மலரவிழ்”.

மலரவிழ் | Malaravizh (Tamil Edition)
இக்கதையில் உலா வரும் மனிதர்களை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். ஜேனும் அரவிந்தனும் நாம் அறியாதவர்கள் அல்ல. இவர்களின் வாழ்க்கை இல்லாததை இருப்பதாகச் சித்தரிக்கும் கட்டுக்கதையும் அல்ல. இருவரின் வயதும், சூழலும், பின்புலமும், சிக்கல்களும் வெவ்வேறு தான் எனினும் அவர்களை அருகருகே கொண்டு வந்து நிறுத்தும் பொதுவான புள்ளி ஒன்று உண்டு. குரலற்றவர்களின் குரலாக அவர்களின் ரணத்தையும், அனுபவங்களையும் படிப்பினைகளையும் பகிரும் நோக்கமே இவ்வெழுத்திற்கான வித்து. “மலரவிழ்” குறித்த தங்களின் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். உங்களது ஆதரவுக்கும் மதிப்புமிகு விமர்சனங்களுக்கும் எனது நன்றிகள் பல!🙂💕

Friday, March 10, 2023

இதழ் வரி கவிதை - முழு நாவல் ஆடியோ வடிவில்

ஹாய்,

இதழ் வரி கவிதை முழு நாவலையும் ஆடியோ வடிவில் இங்கே கேட்கலாம்.



Enjoy Listening! தொடர்ந்து கதைகளைக் கேட்டு மகிழ நம்ம சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்!

நன்றி!
🙂❤️


Wednesday, March 8, 2023

ஒரு புதிய முயற்சி

ஹாய்! வாசக நண்பர்களுக்கு அன்பு வணக்கம்!!
‘ஹேமா, நீ ஆன்லைனில் எழுதுவதில்லை. அச்சுப்புத்தகம்/கிண்டில் போன்ற ஆப்கள் தவிர உன் கதைகளை வேறெங்கு படிக்கலாம்?’ ‘எனக்கு தமிழ் பேசத் தெரியும், சரளமாகப் படிக்கத் தெரியாதே, எப்படி உன் கதையை வாசிப்பது?’ ‘புஸ்தகா மூலம் நான்கு ஒலி புத்தகங்கள் வெளி வந்துள்ளன என்றாய். மற்றவை?’ ‘உன் புத்தகங்களைப் படிக்க விருப்பம் தான். கண்கள் ஒத்துழைப்பதில்லை’ - இவை அனைத்தும் அவ்வப்போது நான் எதிர்கொள்ளும் உரையாடல்கள். கடைசியாகக் குறிப்பிட்டது என் அம்மா உட்பட நம்மில் பலருக்கும் உள்ள ஆதங்கம். அவரவரே வரி வரியாக வாசித்துத் துய்க்கும் வாசிப்பு ருசிக்கு மாற்று வேறெதுவும் இல்லை என்றாலும் பயணத்திலும், வேலைகள் செய்து கொண்டும் கதைகள் பேசுவதும் கேட்பதும் நம் அனைவருக்கும் விருப்பமான ஒன்று தானே! எனவே, மேற்கண்டவைகளுக்கு சிறு மாற்றுத் தீர்வாக - இனி எனது நாவல்களை யூ-ட்யூப் வாயிலாக செவி வழி புத்தகங்களாகவும் கேட்டு மகிழலாம் மக்களே!
It’s a very tiny baby step! சிற்சில வருடங்களுக்கு முன்பு ஒரு தீபாவளி சமயம் சுயநளபாகத்தில் விளைந்த முறுக்கு அதிரசங்களை நொறுக்கிக் கொண்டே இப்படியொரு சிறுபிள்ளை விருப்பமாகத் துளிரிட்டது தான் எழுதிப் பார்க்கலாமே என்கிற எண்ணம்😀. ஆர்வமும் அதற்கு இணையான தயக்கமுமாக ஆரம்பித்த இப்பயணத்தில் எத்தனை எத்தனை நட்புகள், அன்பு, பிணைப்பு இங்கு உருவாகியுள்ளது, எவ்வளவு கற்றுக்கொண்டிருக்கிறேன், என்னுலகம் எத்தனை விரிந்திருக்கிறது என்று எண்ணிப் பார்க்கும்போது நெகிழ்வாக உள்ளது. All because of your continuous support & feedback. Do extend your warm support for this effort too.❤️
‘ஹேமா ஜெய் ஆடியோ நாவல்ஸ்’ஐ உங்கள் விருப்ப அட்டவணையில் சேர்த்துக்குங்க. https://www.youtube.com/@hemajaynovels
யூ-டியூப் தளம் எனக்குப் புதிது என்பதால் ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டு தான் செய்ய முயல்கிறேன். கற்றல் உற்சாகமளிக்கிறது. எனினும், தெரிந்து கொள்ள வேண்டியது ஏராளம். ஏராளம். கொஞ்சம் பயமுறுத்துகிறது. நிறைய நேரம் கேட்கிறது. Hope I will learn at least few basics in this exercise. My heartfelt gratitude to Ezhil who taught me the technicalities. You are a great teacher Ezhil Ezhil Anbu. Thank you so much🙏❤️! Nitha Nithani Prabu, Rosei akka Rosei Kajan, Alamu Alamu Palaniappan, Priya Mohan, Arthy Arthy Ravi and Sudha Sudha Thirumalai- Thanks a bunch for your valuable insights!❤️
உங்கள் மனம் கவர்ந்த “இதழ் வரி கவிதை” நாவலை முழுமையாக சேனலில் பதிவேற்றி இருக்கிறோம். கதைகளைக் கேளுங்கள். எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த உங்களுடைய கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். Do Like, Comment, Share & Subscribe! Looking forward for your support!!
அன்புடன்,
ஹேமா ஜெய்

Monday, January 23, 2023

மிளிர் - Reviews

                                                    https://www.amazon.in/dp/B0BN1Y2PD4

                                                    https://www.amazon.com/dp/B0BN1Y2PD4

Feb 23 2023 Ms. Arthy Ravi 

மிளிர் - அருமையான எழுத்தாக்கம். நம்மில் ஓடும் பல சிந்தனைகளை இக்கதையில் காணும் போது மனம் துள்ளுகிறது. சபாஷ் போட வைக்கிறது. பல தெளிவான பலரைத் தெளிய வைக்கிற கருத்துகள் இந்த அழகான கதையின்
பின்னலில்!
மெல்லிசையாய் ஒரு காதல்!
அனைவரும் வாசிக்க வேண்டிய நாவல். உங்கள் சரி பாதி தமிழ் வாசிக்கிறவராக இருந்தால் இப்புத்தகத்தை வாசிக்கக் கொடுங்கள். மூத்த சந்ததியினரும் வாசிக்க வேண்டியது. இளையவர்களும் வாசிக்கலாம்.
Applauses Hema Jay! Keep writing more! 😍😍🤗❤️👏🏼👏🏼👏🏼

Nov 23 2022 Ms. Amirtha Seshadri

மிளிர்- hema jay

படிப்பதில் ஆரம்பித்து வேலை என எல்லாவற்றையும் போராடி பெற்ற காவ்யா, ஆணாதிக்க மனம் கொண்டவனுடன் நிச்சயத்தை திருமணத்தை நிறுத்தி, வேலைக்கு வெளிநாடு செல்லும் பெண், ஏற்பாடு செய்வது அவளை முதன்முதலில் ஒரு மழைநாளில் சந்தித்து, உடனே அவள் மேல் ஈர்ப்பு தோன்றிய, அன்றே தன் ரூம்மேட்க்கு நிச்சயமான பெண் என தெரிந்து ஆன் சைட்க்கு வர....
காவ்யா வெளிநாட்டு வேலைக்கு வந்ததால், அவள் குடும்பத்தின் பெண்களின் பார்வையும் விசாலமாக,
அவள் பெற்றோர் தரப்பு நியாயங்கள் என..
தமிழ் தரப்பில் கோதை எப்படி அக்கா தம்பி இணைகிறார்கள்...
என கவிதையாய் ஒரு கதை. நவீன் க்கு பல் வலி விட்டு போனதே ஒரு நல்ல வழி...😁😁😁.
ஒரே ஒரு குற்றம் தமிழும் காவ்யாவும் இணைவதை காட்டாமல் விடுவது
Hema Jay 😬😬😬😬
விரிய விரிய வானம்!
அவள் செழியன் எப்போதும் சொல்வது இது. வானம் எப்போதும் விரிந்து தான் கிடக்கிறது. எல்லாப் பறவைகளாலும் பறந்து விட முடிகிறதா, என்ன? வானம் விரிந்தே கிடந்தாலும் சிறகுகள் கட்டப்பட்ட பறவைக்கு சேர்ந்து கடக்க முந்தாத, முரண்டாத, முகம் சுணங்காத தோழமையும் காதலுமான ஒரு துணைப் பறவை தேவை, அவளுக்குக் கிடைத்த செழியனைப் போல. காதல் இணையின் ஒத்திசைவும், ஊக்கமும் துணை இருந்தால் எந்த வானத்தையும் எளிதாகக் கடந்து விடலாம் என்று தோன்ற, இறகின் சுமை கொண்டவளாய் எழுந்து.....