"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Tuesday, November 27, 2018

காதல் கஃபே

நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? ஒரு நல்ல விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். "காதல் கஃபே" - எனது புதிய நாவல் அமேசானில் மின்னூலாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Saturday, October 27, 2018

ஈரம் - சிறுகதைத் தொகுப்பு

நண்பர்களுக்கு,

அமேசான் கிண்டலில் ஈரம் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பல்வேறு இதழ்கள், வலைப்பூக்கள், மின்னிதழ்களில் வெளிவந்த/பரிசு பெற்ற சிறுகதைகள் மற்றும் சில கட்டுரைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இவ்விடம் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.

Monday, October 22, 2018

மலரினும் மெல்லிய - சில பார்வைகள்

வணக்கம்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நான் இந்த பக்கம் வந்தே ரொம்ப நாட்கள் ஆகி விட்டன.  வேலைகள் நெருக்குவதால் தெரிந்தோ, தெரியாமலோ பெரிய இடைவெளி விழுந்துடுச்சு. எந்தப் பதிவும் இல்லை என்றாலும் தவறாமல் இங்கு வந்து எட்டிப் பார்த்து செல்லும் நண்பர்களுக்கு என் அன்பும், நன்றியும்!

Tuesday, June 19, 2018

மலரினும் மெல்லிய

அனைவருக்கும் வணக்கம், 

'மலரினும் மெல்லிய’ எனது அடுத்த நாவல் புத்தகமாக மலர்ந்துள்ள இனிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.

Thursday, June 14, 2018

Saturday, June 2, 2018

விழிகள் தீட்டும் வானவில் - விமர்சனங்கள்

'விழிகள் தீட்டும் வானவில்' நாவலுக்கு கிடைத்த விமர்சனங்களின் சிறு தொகுப்பு :

Monday, May 28, 2018

சோறு

செந்தூரம் வைகாசி இதழில் இடம்பெற்ற உணவு பற்றிய கட்டுரையை கீழே இணைத்துள்ளேன். செந்தூரம் இதழில் இடம்பெற்ற சுட்டி இங்கே : சோறு

Monday, May 14, 2018

அமிழும் நிகழ்கள்


பனிமலர் மே - 2018 இதழில் வெளியான சிறுகதை : 

ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்த நிமிஷம் குழந்தைகள் இருவரும் அந்த பன்னாட்டு உணவு விடுதியை நோக்கி ஓட, “ஏன்டா... எப்பப்பாரு அந்த கோழிக்காலேதான் வேணுமா?” சலித்துக்கொண்டே பின்னால் நடந்தாள் பிருந்தா. “இங்கயே என்ன வேணுமோ சாப்ட்டுட்டு வந்துடுங்க. வீட்டுக்கு போய் ‘தோசை ஊத்தேன், தயிர்சாதமாச்சும் கொடேன்’னு படுத்தாதீங்க...” என்னிடம் திரும்பியவள் அழுத்தமாக சொல்ல, சிரிப்போடு முறைத்தேன். “ஆமா. அப்படியே கேட்டவுடனே செஞ்சு கொடுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்ப பாரு...” உள்பாக்கெட்டில் வைத்த கார் பார்க்கிங் ரசீதை நெருடியபடி உட்கார்ந்தபோதுதான் கவனித்தேன்.

காதல்

மிகுந்த யோசனைக்குப் பிறகு இந்த பதிவை இங்கு பதிவிடுகிறேன். அதீத புனிதமாக்கப்படும் எந்த விஷயமும் ஆபத்தானதே. அவரவர் கருத்து, விருப்பம், சாதி, கடவுள், மதம் தொடங்கி நட்பு, காதல் வரை சகல விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

Wednesday, February 14, 2018

உனக்கென்ன !!!?

“உனக்கென்ன !!!?” எள்ளலாக, புகைச்சலுடன் ஒலிக்கும் இந்த வார்த்தையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்கொள்ளும் ஒவ்வொரு முறையும் சுறுசுறுவென்ற எரிச்சல் பற்றிக்கொண்டு வரும். வெறும் நிமிடக்கணக்கில், மணிக்கணக்கில் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் அடுத்தவரின் வாழ்க்கையைப் பற்றி என்ன புரிதல் இருக்கும்? இதில் அர்த்தமில்லா அல்ப விஷயங்களுக்கெல்லாம் ஒப்பிட்டு அனல்மூச்சு விடுவது???!!!

Thursday, February 1, 2018

புன்னகை என்ன விலை?

ஒரு குட்டிக்கதை...

"காலங்கார்த்தாலே எவ்ளோ ட்ராபிக் பாரு?" ஒரு கையில் காபி மக்கும், மறுகையில் ஸ்டீரிங்குமாக தீபக் போக்குவரத்தில் கலக்க, "மண்டேல.. அதான்" பக்கத்திலிருந்த சுஷ்மா காம்பேக்ட்டை ஒற்றிக்கொண்டாள். "ஓ.. மை காட்.. எட்டு இரண்டு ஆச்சு. எட்டேகால் ட்ரைன் போயிடும்.. சீக்கிரம் போங்களேன்." நேரத்தை கவனித்தவள் அவசரமாக லிப்ஸ்டிக்கை சரிசெய்ய, "போயிடலாம், டோன்ட் வொர்ரி" தீபக் ஆக்சிலேட்டரை முழு வேகத்தில் அழுத்தினான்.

Tuesday, January 9, 2018

விழிகள் தீட்டும் வானவில் - புத்தக வடிவில்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

'விழிகள் தீட்டும் வானவில்' புத்தக வடிவில் வெளியாகும் மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எண்ணற்ற புத்தம் புது நூல்கள் வெளியாகி அடைமழையென பொழியும் சென்னை புத்தகக் கண்காட்சியில் நமது இருப்பும் சின்னஞ்சிறு துளியாக இணைவது இதமளிக்கிறது. பெரிய பெரிய ஜாம்பவான்கள் நீந்தும் ஆழ்கடலில் ஒரு குட்டிக் கூழாங்கல்லுக்கு உண்டாகும் உவகை!